ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு ஆதாயம் என்பதால் அமெரிக்க தடையை இந்தியா ஏற்க கூடாது என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் பார்வதிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.